”வளர்ச்சிய விட மனித உயிர்தான் முக்கியம்!” - நெய்வேலி பாய்லர் விபத்து சம்பவத்தில் கமல் ஆவேசம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ள நிலையில், என்.எல்.சி. 2வது அனல்மின் நிலைய முதன்மைபொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், “கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம். விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட
கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம்.
விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம்.
இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 1, 2020
மனித உயிர்கள் முக்கியம். இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
