திடீரென டயர் வெடித்து விபத்துக்குள்ளான கார்.. துணை கலெக்டருக்கு நேர்ந்த பரிதாபம்.. கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட துணை ஆட்சியர் ராஜாமணி. இவர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியராக பணியாற்றி வந்தார். இந்த சூழலில் சங்காரபுரத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு வழங்கிய காரில் துணை ஆட்சியர் ராஜாமணி சென்று கொண்டிருந்தார்.
சங்கராபுரம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக கார் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடியது. இந்த விபத்தில் காரில் பயணித்த துணை ஆட்சியர் ராஜாமணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அடுத்து உயிரிழந்த துணை ஆட்சியர் ராஜாமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் துணை ஆட்சியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
