'சென்னை' டூ கரூர்: கொரோனாவுக்கு 'பலியான' மகன்... சரியாக 10 நாட்கள் கழித்து 'தாய்க்கு' நேர்ந்த துயரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகன் இறந்த 10-வது நாளில் தாய்க்கு நேர்ந்த துயரம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவர் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் சென்னையில் இருந்து கரூர் வந்த அவருக்கு காய்ச்சல், சளி இருந்ததால் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர் கொரோனா தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 21-ம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் 58 வயதான அவர் தாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்-மகன் கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலியாகி இருப்பது கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரூரில் இதுவரை 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மற்ற செய்திகள்
