‘அதிகாலை கேட்ட பயங்கர சத்தம்’.. திண்டுக்கல் அருகே நிலநடுக்கமா..? வீடுகளில் விழுந்த விரிசல்.. பீதியில் மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒட்டன்சத்திரம் அருகே திடீரென நில அதிர்வு உணரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது சொல்லப்படுகிறது. வெடிகுண்டு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பலரும் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலையோரங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் லேசாக விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நில அதிர்வின் போது மிக கடுமையான சத்தம் ஏற்பட்டதாகவும், இதனால் வீட்டில் வைத்திருந்த பாத்திரங்களில் அதிர்வு உணரப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த பழனி கோட்டாட்சியர் சிவகுமார், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புள்ளியல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளியியல் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னரே இந்த சத்தத்திற்கான காரணம் என்ன என்று தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
