Beast BNS News

‘ஆயுள்தண்டனை கைதியான கணவர் மூலம் குழந்தை பெத்துக்கணும்’.. கோரிக்கை வைத்த மனைவி.. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 10, 2022 12:38 PM

ஆயுள் தண்டனை குற்றவாளியாக சிறையில் இருக்கும் கணவன் மூலம் குழந்தை பெற விரும்பி மனைவி வைத்த கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.

Rajasthan High Court granting parole to murder convict

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர் நந்தலால். இவர் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நந்தலாலுக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார்.

இதனிடையே கணவருடன் திருமண உறவில் ஈடுபடவும், அவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவும், அதனால் அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் நந்தலாலின் மனைவி ரேகா ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஃபர்சாந்த் அலி, ‘சிறையில் உள்ள ஆயுள் கைதியின் மனைவி குழந்தை பெற்றுக்கொள்வது அவரது அடிப்படை உரிமை. அவர் எந்த குற்றங்களையும் செய்யாத போதும், கணவன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை தடுப்பது மனைவியின் உரிமையை மோசமாக பாதிக்கும். ஒரு குற்றவாளியை இயல்பாக்குவதற்கும், அவர்களின் நடத்தையை மாற்றுவதற்கும் திருமண உறவுகள் உதவும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என தெரிவித்தனர்.

Rajasthan High Court granting parole to murder convict

மேலும் எந்த தவறும் செய்யாமல் கணவன் இல்லாமலும், பிள்ளைகள் இன்றியும் தவிக்கும் நிலைக்கு மனைவி தள்ளப்படக் கூடாது என நீதிமன்றம் வலியுறுத்தியது. எந்த வெளிப்படையான விதிகளும் இல்லாத நிலையிலும் பல சமூக விஷயங்களை கருத்தில் கொண்டு மனைவியுடன் திருமண உறவில் ஈடுபட்டு குழந்தை பெற்றுக்கொள்ள ஆயுள் தண்டனை கைதி நந்தலாலுவுக்கு 15 நாட்கள் அவசர பரோல் வழங்கி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : #RAJASTHAN #HIGHCOURT #WIFE #BIRTH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajasthan High Court granting parole to murder convict | India News.