‘வாஷிங் மெஷினில் இருந்த சாவி’.. கோழிப்பண்ணையில் வேலை பார்த்த பெண் செஞ்ச காரியம்.. ஷாக் ஆன குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் வீட்டில் பெண் ஒருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Coimbatore woman arrested in theft case by police Coimbatore woman arrested in theft case by police](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/coimbatore-woman-arrested-in-theft-case-by-police.jpg)
Also Read | ‘என்ன பவுலிங் போட சொன்னா அம்பயரை அட்டாக் பண்றீங்க’.. மன்னிப்பு கேட்ட பொல்லார்டு.. சிரித்த ரோகித்..!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காட்டம்பட்டியைச் சேர்ந்தவர் கிரிகதிர்வேல் (வயது 54). இவர் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு துக்க நிகழ்ச்சிக்காக நேற்று வெளியே சென்றுள்ளனர். பின்னர் மாலை வீடு திரும்பியபோது பீரோவில் இருந்த நகை, பணம் திருடு போயுள்ளது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கிரிகதிர்வேல் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்படாமல் பீரோவில் இருந்த பணம் திருடு போனது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, அருகில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை பார்த்து வந்த மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த ரேவதி (வயது 32) என்ற பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து 14 சவரன் நகை மற்றும் 4500 ரூபாய் பணம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கிரிகதிர்வேல் குடும்பத்துடன் வெளியே சென்றதை ரேவதி நோட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து வீட்டின் முன்பு இருந்த வாஷிங் மெஷினில் வைத்து இருந்த சாவியை எடுத்து, கதவைத் திறந்து பீரோவில் இருந்த பணம் மற்றும் நகையை திருடியது தெரியவந்தது. இந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)