'கொரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்க...' 'ஹெர்ட் இம்யூனிட்டி' முறை 'கைகொடுக்குமா?...' 'மருத்துவர்கள் கூறுவது என்ன?...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 07, 2020 12:03 PM

கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி முறையை மரத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Will the Herd Immunity System help to escape the corona impact?

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் அதிகப்படியான மக்கள் ஒரு தொற்று நோய்க்கு எதிராக தடுப்பாற்றல் பெறுவதன் மூலம், அந்த நோய் மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுத்து நிறுத்தும் சக்தியை ஹெர்ட் இம்யூனிட்டி என அழைக்கின்றனர். இது ஒரு சமூக நோய் எதிர்ப்பாற்றல் என எடுத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நடுத்தர வயதுடையோரை சமூகத்தில் சுதந்திராமாக உலவ விடுவதின் மூலம் அவர்களுக்கு இயல்பாகவே கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகும் என கூறப்படுகிறது. இந்த நேரத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தி விட வேண்டும். இதன் மூலம் பெறப்படும் எதிர்ப்பு சக்தி கொரோனாவை ஒரு சமூகத்திலிருந்து மொத்தமாக விரட்ட வழிவகுக்கும்எனக் கூறப்படுகிறது.

இருப்பினும் கொரோனாவை பற்றியும் அதன் தீவிரத்தன்மையை பற்றியும் எதுவும் தெரியாத காரணத்தால் இந்த முறையை அமல்படுத்த அரசு யோசிக்கிறது. கொரோனாவால் அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிகம் பாதிக்கப்பட்ட பிரிட்டனில் இந்த முறையை பயன்படுத்தி சமூக நோய் எதிர்ப்பாற்றலை கொண்டுவரலாம் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் பின்னர் அது கைவிடப்பட்டது. ஏற்கெனவே ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில், இந்த முறையால் எதிர்விளைவுகள் ஏற்பட்டு விட்டால் உயிரிழப்பு கட்டப்படுத்த முடியாமல் சென்று விடும் என்பதால் இந்த முறையை கைவிட்டு விட்டனர்.