"மைனா மைனா நெஞ்சுக்குள்ள".. நந்தினிய பாத்து பாடிய ஜிபி முத்து.. "அட, இதுக்கு தான் அப்படி பாடுனாரோ?"

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Oct 21, 2022 01:07 AM

தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி மட்டுமில்லாமல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டு களிக்க முடியும்.

GP Muthu sing tamil song to myna nandhini in bb6 tamil

இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது. அது மட்டுமில்லாமல், சில போட்டியாளர்களுக்கு என்று பிரத்யேக ஆர்மி உருவாக்கி அவர்கள் குறித்த விஷயங்களை ரசிகர்கள் பலரும் வைரல் ஆக்கியும் வருகின்றனர்.

அதே போல, பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க் காரணமாக பல்வேறு வாக்குவாதங்கள் உள்ளிட்ட விஷயங்கள், போட்டியாளர்கள் இடையேயும் நடந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பும் அதிகமாக உள்ளது.

இதனிடையே, சமீபத்தில் அசல் கோலார் மற்றும் தனலட்சுமி இடையே வாக்குவாதமும் பெரிய அளவில் உருவாகி பிக்பாஸ் வீட்டிற்குள் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதன் தொடர்ச்சியாக, விக்ரமன், அசீம், ADK, ஜிபி முத்து ஆகியோரிடையே நடந்த உரையாடல் கூட அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது.

GP Muthu sing tamil song to myna nandhini in bb6 tamil

ஆனால், அதே வேளையில் ஏதாவது கலகலப்பான விஷயங்கள் கூட பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், மைனா நந்தினியை ஜிபி முத்து எழுப்பி விடுவது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில் இருந்தே கலகலப்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் வலம் வரும் ஜிபி முத்து, நடுவே குடும்பத்தை நினைத்து மனம் வருந்தி வெளியேறுவதாகவும் கூறி இருந்தார். தொடர்ந்து, போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் ஆகியோர் அறிவுறுத்திய பின்னர், மீண்டும் முன்பு போல இயங்கி வருகிறார்.

GP Muthu sing tamil song to myna nandhini in bb6 tamil

அது மட்டுமில்லாமல், பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகவும் ஜிபி முத்து தான் செயல்பட்டு வருகிறார். அப்படி ஒரு சூழலில், வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போட்டியாளர்களை எழுப்ப ஜிபி முத்து முயற்சி செய்கிறார். முதலில், ஷிவினிடம் போட்டியாளர்கள் தூங்குவது பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஜிபி முத்து, "கடைசில எனக்கு பிரச்சனை வருகிறது" என கூறியபடியே ஷிவின் அருகே மறைந்து தூங்கிக் கொண்டிருக்கும் மைனா நந்தினியை ஜிபி முத்து கவனிக்கிறார்.

GP Muthu sing tamil song to myna nandhini in bb6 tamil

கீழே மறைந்து தூங்கும் மைனா அருகே சென்ற ஜிபி முத்து, "மைனா மைனா நெஞ்சுக்குள்ள" என்ற பாடலை பாடியபடி அவரை எழுப்புகிறார். அப்போது மைனாவும் நான் யோசித்து கொண்டிருக்கிறேன் என சொல்ல, யோசனையை வெளியே இருந்து செய்யுங்கள் என்றும் ஜிபி முத்து ஜாலியாக கூறுகிறார்.

Tags : #MYNA NANDHINI #GP MUTHU #BB6 TAMIL #BIGGBOSS TAMIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. GP Muthu sing tamil song to myna nandhini in bb6 tamil | Tamil Nadu News.