AUDIO: என்றைக்கோ அப்பா சொன்னதை நினைவில் வைத்து.. வாய்ப்பு வரும்வரை காத்திருந்து டீச்சருக்கு கேத்தி கொடுத்த 'நச்' பதில்
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் தேசிய மொழி என்ன என்பது குறித்து அடிக்கடி சில பல சர்ச்சை பேச்சுகள் எழுவது உண்டு.

இந்தியா 'ஒற்றை நாடு' என்று கருதினால் இந்தியை தேசிய மொழி என ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்தியா 'கூட்டாட்சி நாடு' இந்தியச் சமூகம் பன்மைத்துவம் கொண்டது. எனவே ஒரே ஒரு மொழியைப் பொதுமொழியாக ஏற்பது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதி இழைப்பது போன்றதாகிவிடும் என கருதப்படுகிறது.
டிவிட்டரில் டிரெண்ட் ஆன ஆடியோ:
இந்த நிலையில் சமூகவலைத்தளமான ட்விட்டரில் ஒரு ஆடியோ ஒன்று டிரெண்டிங் ஆகி வருகிறது. அதில், ஆன்லைன் கிளாஸ்ல, டீச்சர் 'Hindi is the National Language of India' என்று சொல்ல, நிறுத்தி நிதானமா அந்த செஸன்ல தன் வாய்ப்பு வரும்வரை காத்திருந்து டீச்சர்க்கு விளக்கியிருக்கு நம்ம வாண்டு.
என்றைக்கோ நான் சொன்னதை நினைவில் வைத்து சரியான நேரத்துல அடிச்சிருக்கு நம்ம வாண்டு' என அந்த ஆடியோவில் பதிவிடப்பட்டுள்ளது.
டீச்சர் எனக்கு இதுகுறித்து ஒரு கருத்து உள்ளது:
அந்த ஆடியோவில் ஆன்லைன் கிளாசில் பாடம் எடுக்கும் ஆசிரியர் நமது தேசிய மொழி இந்தி என குறிப்பிடுகிறார். ஆனால், இந்த வகுப்பில் இருந்த ஒரு குழந்தை கேத்தரின் மட்டும் தனக்கு பேச வாய்ப்பு வரும் வரை காத்திருந்து, நான் இதுகுறித்து கருத்து கூறட்டுமா என அனுமதி கேட்டபின், தன்னுடைய மழலை குரலில் இந்தியாவிற்கு தேசிய மொழியே இல்லை என கூறி பாடம் எடுத்த ஆசிரியருக்கே பாடம் எடுத்துள்ளார்.
சிறுமியை பாராட்டிய ஆசிரியர்:
அதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் மலையாளம் தெலுங்கு, தமிழ் என பல மொழிகள் உள்ளன என்பதையும் கூறியுள்ளார் கேத்தரின் என்ற சிறுமி. இதனை கேட்ட ஆசிரியரோ சிறுமியை good என சொல்லி பாராட்டியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆன்லைன் கிளாஸ்ல, டீச்சர் “Hindi is the National Language of India” என்று சொல்ல, நிறுத்தி நிதானமா அந்த செஸன்ல தன் வாய்ப்பு வரும்வரை காத்திருந்து டீச்சர்க்கு விளக்கியிருக்கு நம்ம வாண்டு.
என்றைக்கோ நான் சொன்னதை நினைவில் வைத்து சரியான நேரத்துல அடிச்சிருக்கு நம்ம வாண்டு😂 #கேத்தி 1 pic.twitter.com/T7rD34rREA
— பரம்பொருள் (@paramporul) January 18, 2022

மற்ற செய்திகள்
