'கொரோனா தடுப்பூசி போட வாங்க...' 'உங்களுக்கு செம ஆஃபர் வச்சுருக்கோம்...' - இஸ்ரேல் பாரின் வியக்க வைக்கும் செயல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகெங்கும் கொரோனா வைரசால் அன்றாட செயல்முறைகள் மாறியதோடு மட்டுமல்லாமல் சில விசித்திர சம்பவங்களும் நடந்தேறியது.

அதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியை வெளியிட்டுள்ளது இஸ்ரேலில் உள்ள ஒரு ஓட்டல் நிறுவனம். அதன்படி, இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவசமாக பானம் வழங்குகிறது.
மொத்தம் 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேல் நாட்டில் 43 விழுக்காட்டினருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டும் போடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை குறையலாம் என சுகாதார துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, கொரோனா காலக்கட்டத்தில் மது பார்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், டெல் அவிவ் நகரில் உள்ள ஜெனியா பார் அரசுடன் கூட்டணி அமைத்து தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவசமாக பானங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
கூடுதலாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடனடியாக மது அருந்தக்கூடாது என்பதால் மது சாராத பானங்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மட்டுமல்லாது சில வாரங்களுக்கு முன் துபாயில் இருக்கும் ஒரு ஹோட்டல் நிறுவனமும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பில்லில் சலுகை வழங்கப்படும் என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
