ஒரு நிமிஷத்துக்கு 95 ... 2019-ல் இந்தியர்கள்... விழுந்து,விழுந்து 'ஆர்டர்' செய்த உணவு இதுதான்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 24, 2019 03:53 PM

2019-ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு குறித்த புள்ளிவிவரங்களை ஸ்விக்கி  நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. சுமார் 500 நகரங்களில் ஆய்வு செய்து StatEATistics என்ற பெயரில் ஸ்விக்கி இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.இதில் வழக்கம்போல பிரியாணி முதலிடத்தை பிடித்திருக்கிறது.

Indians ordered 95 biryanis per minute from Swiggy

மேலும் ஸ்விக்கியில் புதிதாக கணக்கு தொடங்குபவர்களும் முதலில் பிரியாணி தான் ஆர்டர் செய்துள்ளனர். குறிப்பாக 1 நிமிடத்துக்கு 95 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகிறதாம். தொடர்ந்து 3 வருடங்களாக இந்த பட்டியலில் பிரியாணி முதலிடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல சைவ பிரியர்களின் பேவரைட் டிஷ்ஷான கிச்சடி பிரியாணிக்கு அடுத்த இடத்தை இந்த பட்டியலில் பிடித்துள்ளது. இதேபோல சைவப்பிரியர்கள் மத்தியில் பீட்ஸாவுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. பீட்ஸாவில் காளான், சீஸ், வெங்காயம், பன்னீர், குடை மிளகாய் ஆகியவற்றை சுவைக்காக வாடிக்கையாளர்கள் அதிகம் தூவ சொல்கிறார்களாம்.

டெசர்ட் வகைகளை பொறுத்தவரையில் குலாப் ஜாமூன், பருப்பு அல்வா போன்ற இனிப்பு வகைகளை இந்தியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்களாம். இதேபோல புது வரவான பலூடாவையும் இந்தியர்கள் அதிகம் விரும்புவதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. 

 

Tags : #BIRYANI