சூப்பருங்கண்ணா..! காதுக்கு தகவல் வந்த அடுத்த நிமிடமே நேரில் சென்று உதவிய விஜய் ரசிகர்கள்.. குவியும் பாராட்டு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஆதரவற்றோர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கினர்.

நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் ‘விஜய் மக்கள் இயக்கம்’ மூலமாக அவரது ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று தேனியில் ஆதரவற்றோருக்கு புத்தாடை, இனிப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
அப்போது அப்பகுதியில் உள்ள செருப்பு தைக்கும் தொழிலாளியின் குடும்பம் தீபாவளிக்கு புத்தாடை கூட வாங்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் உடனடியாக புத்தாடைகள், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களை அவர்களுக்கு நேரில் சென்று வழங்கினர். அப்போது அப்பகுதியில் வீடு இல்லாமல் சாலையில் இருக்கும் யாசகர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கும் புத்தாடைகள் வழங்கினர். விஜய் ரசிகர்களின் இந்த செயல் பலரது பாராட்டை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
