VIDEO: தேசியகீதம் போடுறப்போ இப்படி தான் பண்ணுவீங்களா? கடுப்பான ரசிகர்கள்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கோலி
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது தேசிய கீதம் இசைத்தபோது விராட் கோலி செய்த காரியம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று நடைபெற்று முடிந்தது. முத்த இரண்டு போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வென்ற நிலையில் மூன்றாவது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
அடித்து துவம்சம் செய்த தென் ஆப்பிரிக்கா:
தென் ஆப்ரிக்க அணியில் முதல் இரண்டு வீரர்கள் வந்த வேகம் தெரியாமல் அவுட் ஆனாலும், அபாரமாக ஆடிய குயின்டன் டி காக் 124 ரன்கள் அடித்து பந்தை நாலா பக்கமும் சிதற விட்டார். இவருடேன் சரியான கம்பெனியாக சேர்ந்த வான் டெர் துசென் 52 ரன்கள் அடித்து அவர் பங்கிற்கு விளாசினார். டேவிட் மில்லரும் அதிரடியாக 39 ரன்கள் அடித்தார். தென் ஆப்ரிக்க அணி 49.5 ஓவர் முடிவில் 287 ரன்கள் எடுத்திருந்தது.
போராடி தோல்வி:
சற்று கடினமாக இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 61 ரன்களுடன், விராத் கோலி 65 ரன்களுடனும் அப்பாடா இந்த போட்டியாவது ஜெயித்து விடலாம் என இந்திய அணிக்கு நம்பிக்கை தந்தனர். கேப்டன் ராகுலும், பந்தும் வந்த வேகம் தெரியாமல் வெளியேறவே. கடைசி நேரத்தில் தீபக் சகார் 54 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற ஒரு விக்கெட் மட்டும் உள்ள நிலையில் 6 ரன் தேவைப்பட்டது. இதன் இரண்டாவது பந்தில் சகால் விக்கெட் ஆனார். இந்திய அணி 49.2 ஓவர் முடிவில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது.
இசைக்கபட்ட தேசிய கீதம்:
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக வழக்கம்போல் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இரு நாட்டின் தேசிய கீதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒலிக்கப்படுவது வாடிக்கை. அப்போது அந்தந்த நாட்டு வீரர்கள் தங்கள் மனதிற்குள் தேசிய கீதத்தை மெளனமாக பாடுவார்கள். அந்த நேரத்தில் நாட்டிற்கு மரியாதை செய்யும் விதமாக அமைதியாக நேர்ப்பார்வையுடன் நின்றிருப்பார்கள். தேசிய கீதம் இசைக்கும்போது பார்வையை வேறு எங்கிலும் சிதற விடமாட்டார்கள்.
இந்நிலையில், நேற்று இந்திய தேசிய கீதம் ஒலித்தபோது, விராட் கோலி சுயிங்கம் மென்று கொண்டு வாயை நன்றாக அசைத்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சி வீடியோவாக பதிவாகி உள்ளது. இதை டிவிட்டரில் பரவவிட்ட ரசிகர்கள் விராட் கோலியை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Virat Kohli busy chewing something while National Anthem is playing. Ambassador of the nation.@BCCI pic.twitter.com/FiOA9roEkv
— Vaayumaindan (@bystanderever) January 23, 2022