'நள்ளிரவு' 3 மணிக்கு நிகழும் 'கொரோனா உயிரிழப்புகள்...' 'காரணம் என்ன...?' 'மருத்துவர்கள்' கூறும் 'விளக்கம்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நோயாளிகளின் உயிரிழப்புகள் பகல் நேரத்தைவிட இரவு நேரங்களில் நிகழ்வதற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கொரோனா நோயாளிகள் பெரும்பாலும் நள்ளிரவு 3 மணி அளவில் உயிரிழப்பதாக கூறும் மருத்துவர்கள், அதற்கு இரத்தத்தில் ஆக்சிஜனேற்றத்தின் பின்னடைவுதான் காரணம் என தெரிவிக்கின்றனர். இதனால், கொரோனா நோயாளிகள் பகல் நேரத்தை விட இரவில் அடிக்கடி கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மனித உடலில் ஆக்ஸிஜன் மற்றும் குளுக்கோஸ் இருந்தால் மட்டுமே அனைத்து திசுக்களும் உயிரணுக்களும் செயல்படும். சில நேரங்களில் நம்மிடம் குறைவான ஹீமோகுளோபின் (13 கிராமுக்கு குறைவாக) இருந்தால், நுரையீரல் அதிக ஆக்ஸிஜனைக் கொடுத்தாலும், அது எல்லா உயிரணுக்களுக்கும் கொண்டு செல்லப்படுவதில்லை.
குறைந்தபட்ச தேவை 13 கிராம் ஹீமோகுளோபின் ஆகும். உதாரணமாக, குறைந்த ஹீமோகுளோபின் கொண்ட இரத்த சோகை நோயாளிகளின் ஹீமோகுளோபின் அளவு 6 கிராம் என்றால், அவர்களுக்கு ஆக்சிஜன் சுமந்து செல்லும் திறன் மிகக் குறைவாக இருக்கும்.
ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு போதுமான ஹீமோகுளோபின் (13 கிராம்) இருந்தாலும் கூட, உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் போதுமான ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அடுத்ததாக சிம்பாதெடிக் டோன் எனப்படும் அனுதாப நரம்பு மண்டலம் குறித்து மருத்துவர்கள் கூறுகின்றனர். இது முதுகெலும்பு நரம்புகளால் உள் உறுப்புகளை மூளைக்கு இணைக்கிறது. இது தூண்டப்படும்போது, இதயத் துடிப்பையும், தசைகளுக்கு இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். இதனால் ஒருவருடைய மனநிலை சீராக இருக்கும்.
சாதாரணமாக இதய துடிப்பு அளவீடானது 78 ஆகும், இது தூக்கத்தின் போது குறையும். அதேபோல 20 ஆக இருக்கும் சுவாச வீதம் 15 ஆக குறையும். இது சாதாரண உடலியல் செயல்முறை. இது நடக்கவில்லை என்றால், ஆக்சிஜன் இயக்கம் குறைந்து ஒருவரால் சீராக உறங்க முடியாது.
ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்கெனவே ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் வீதம் குறைந்திருக்கும். இதனால் தூக்கத்தின் போது, இயற்கையான உடலியல் நிகழ்வுகள் காரணமாக இதயத் துடிப்பு, சுவாச வீதத்தில் மேலும் குறைவு ஏற்படுகிறது. சிக்கலான நோயாளிகளால் இதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை
இதுபோன்ற காரணங்களால் தான் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் அதிக அளவு கொரோனா நோயாளிகள் இறப்புகளுக்கு காரணமாகிறது.