200 பேரை கூட்டி... 'சென்னை'யில் நடந்த 'ரகசிய' திருமணம்.... நீங்களாவே இத செஞ்சுருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா ஹாட் ஸ்பாட்டாக சென்னை திகழ்கிறது. இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோர் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதிகரிக்கும் கொரோனாவை கட்டுக்குள் வைக்க 30-ம் தேதி வரை சென்னையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் எந்தவித அனுமதியும் இல்லாமல் ரகசியமாக 2000 பேரை கூட்டி திருமணம் நடத்தப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று காலை பட்டாளம் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் ரகசியமாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சமூக இடைவெளி உள்ளிட்ட எந்தவிதமான கொள்கைகளும் பின்பற்றப்படவில்லை.
இந்த தகவல் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்தது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகளை பார்த்து திருமண வீட்டார் அதிர்ந்து போயினர். மணமகன்,மணமகள் இருவரின் பெற்றோரையும் அழைத்து விசாரித்த போது அனுமதி வாங்கவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி, திருமண வீட்டினருக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலமாக கொரோனா பரவினால் திருமண வீட்டார் மீது வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
