ஏற்கனவே 'பயந்து' போய் கெடக்குறோம்... இதுல இது வேறயா... கொரோனாவால இறந்தவரை புதைத்து விட்டு அதனருகிலேயே... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நபரின் உடலை அடக்கம் செய்த ஊழியர்கள், உடலை அடக்கம் செய்த பின்னர் பாதுகாப்பு உடையை அதன் அருகிலேயே கழற்றி போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புழல் கன்னடபாளையம் பகுதியில் உள்ள மயானத்தில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடலை சுகாதார பணியாளர்கள் அடக்கம் செய்தனர். அடக்கம் செய்து முடித்த பின்னர் பணியாளர் ஒருவர் அவரது பாதுகாப்பு கவச உடைகளை கழற்றி மயானத்தின் அருகிலேயே போட்டுச் சென்றுள்ளார்.
இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, இணையதளங்களில் பார்த்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடைகளை எப்படி எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரசு விதிமுறைகள் கொடுத்துள்ளது. ஆனால் இப்படி பொது இடத்தில் பாதுகாப்பு கவச உடைகளை கழற்றி போட்டு விட்டு செல்வது எந்த விதத்தில் நியாயம் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே பொது மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் அதிகளவில் காணப்பட்டு வரும் நிலையில், பணியாளர்களின் இது போன்ற செயல்கள் மேலும் அச்சத்தை உருவாக்குவதாய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
