இந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த... வீரர்கள் 'உடல்களை' சீன அரசு என்ன செய்தது?... வெளியான 'திடுக்' தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சீன வீரர்களை அந்த நாட்டு அரசு முறைப்படி அடக்கம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி இந்திய எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து சீனா எந்தவொரு அதிகாரரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில் உயிரிழந்த சீன வீரர்களின் உடல்களுக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்வதை சீன அரசு தடுத்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. உயிரிழந்த சீன இராணுவ வீரர்களின் உடல்களை அவர்களின் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டாம் என்று இராணுவ வீரர்கள் குடும்பத்தை சீன அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளன.
இராணுவ மரியாதை எதுவும் இல்லாமல், தொலை தூரத்தில் ஒரு இடத்தில் வைத்து தனித்தனியாக அவர்கள் உடல்களை அடக்கம் செய்யுமாறு அந்த நாட்டு அரசு இராணுவ வீரர்கள் குடும்பத்தினரை கேட்டுக் கொண்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை குறிப்பிடுவதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
இது ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருப்பதாகவும், அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்த சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ப்ரீட்பார்ட் நிறுவனம் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
