'ஏன் மாஸ்க் போடுறீங்க'... 'கொரோனான்னு ஒண்ணு இல்ல'... கொரோனவை விமர்சித்த அதிபருக்கு இந்த நிலைமையா?... நொறுங்கிப்போன மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Mar 19, 2021 11:10 AM

முகக்கவசம் அணிவது, ஊரடங்கு நடைமுறைகளை விமர்சனம் செய்வது என இருந்த தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபலிக்கு இந்த நிலையா என்பதே அந்த நாட்டு மக்களின் பெரும் துயரமாக உள்ளது.

Tanzania’s President John Magufuli and Covid-19 sceptic dies at 61

‘தி புல்டோசர்’ என மக்களால் அன்பாக அழைக்கப்படுபவர் தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபலி. 61 வயதான மகுபலியை மக்கள் அப்படி அழைக்க முக்கிய காரணம் அவரது கொள்கைகளும், கோட்பாடுகளும் தான். அதுவே அவரை மக்களின் மனங்களைக் கவர்ந்த மகத்தான தலைவராக உருவாக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆரம்பித்த கொரோனா உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தனர்.

இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் பல நாடுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தியது. ஆனால் அதிபர் ஜான் மகுபலி, முகக்கவசம் அணிவது, ஊரடங்கு நடைமுறை உட்பட அனைத்தையும் விமர்சித்தார். ஒரு கட்டத்தில் தங்கள் நாட்டின் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் தரவுகளை வெளியிடவே மறுத்தார். குறிப்பாக கொரோனா தடுப்பு மருந்தின் மூலமாக தங்கள் நாட்டின் வளங்கள் சுரண்டப்படும் எனவும் மக்களை எச்சரித்திருந்தார்.

Tanzania’s President John Magufuli and Covid-19 sceptic dies at 61

இந்தச்சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாகவே பொது நிகழ்வில் கலந்து கொள்ளாமல் மகுபலி தனது இருப்பிடத்தை ரகசியமாக வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இதனால் அதிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் தான்சானியா அரசு மகுபலி உயிரிழந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாட்பட்ட இதய நோய் தான் அவரது மரணத்திற்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிபர் ஜான் மகுபலியின் திடீர் மரணம் தான்சானியா மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tanzania’s President John Magufuli and Covid-19 sceptic dies at 61 | World News.