"டெய்லி எதுக்குங்க இவ்ளோ கொரோனா கேஸ் வருது?".. டெபியுட்டி கமிஷனரை சேரைத் தூக்கி அடிக்கச் சென்ற கட்சி பிரமுகர்! பரபரப்பு வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னணி இடத்தில் உள்ளது. அங்கு தினசரி ஆயிரக்கணக்கில் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான அரசின் செயல்பாட்டை எதிர்க்கட்சியாக உள்ள மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா விமர்சித்து வருவதாக தெரிகிறது. இதன் நிமித்தமாக அவுரங்காபாத் நகரில் இன்று அக்கட்சி சார்பில் பேரணி நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சுகாஷ் தேஷ்ரேத், மாநகராட்சி இணை ஆணையரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டபோது, “ஏன் இப்படி தினமும் புதிய கேஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன?” என கோபமாக கேட்டுள்ளார்.
அதற்கு இணை ஆணையர் அமைதியாக பதிலளிக்க,
कोरोनावरून ‘मनसे’चा औरंगाबदमध्ये राडा, उपायुक्तांना खुर्ची फेकून मारण्याचा प्रयत्न.
मनसे नेते सुहास दशरते यांनी प्रशासनाला कोरोना उपचारावरून जाब विचारला मात्र समाधान कारक उत्तर मिळाले नसल्याने त्यांनी उपयुक्त निकम यांना खुर्ची फेकून मारण्याचा प्रयत्न केला. pic.twitter.com/rA8lskYU82
— News18Lokmat (@News18lokmat) June 26, 2020
திடீரென, கோபப்பட்ட சுகாஷ், அங்கிருந்த நாற்காலியை தூக்கி அதிகாரியை தாக்க முயற்சித்த சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து அவரை தடுத்த போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பினர்.