என் வழி தனி வழி... என்னை சீண்டி பார்க்காதீங்க... .எதிர்க்கட்சிகளை விளாசிய இம்ரான்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Pandidurai T | Jan 25, 2022 04:06 PM

பாகிஸ்தானில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி (நவாஸ்), அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இம்ரான் கான் தலைமையிலான அரசை கவிழ்க்கவும், பதவி விலக கோரியும் வலியுறுத்தி வருகின்றன.

Pakistani PM has been sharply criticized by opposition parties

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கடந்த சனிக்கிழமையன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.  இதற்கு பதிலளிக்கும் விதத்தில் இம்ரான் கான்  தனது உரையில் எதிர்க்கட்சிகளை கடுமையாக விளாசினார்.

Pakistani PM has been sharply criticized by opposition parties

இதுகுறித்து அவர் பேசியதாவது,  "பணவீக்கம் பிரச்னை தன்னை தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. மேலும், எதிர்க்கட்சிகள் அரசை கவிழ்க்க முற்பட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்.  எரிபொருள் விலையேற்றம் கண்டுள்ளது.  பாகிஸ்தானில் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. தற்போது இவை உலகளாவிய பிரச்னையாக உள்ளது. கொரோனா பாதிப்பால் இத்தகைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

Pakistani PM has been sharply criticized by opposition parties

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆட்சிக்கு வந்தபோது கடும் பணப்பற்றாக்குறை நிலவியது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா, கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வர, மக்கள் நலனுக்காக 6 லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்கிறது. இங்கு 800 கோடி டாலர்கள் மட்டுமே செலவிடுகிறோம். எனவே கொரோனா காலத்தில் இரு நாடுகளின் நிலவரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

ஹெல்மெட் வாங்கி குடுக்கவா சம்பளம் தர்றாங்க.. ஆவேச இளைஞருக்கு போலீஸ் புகட்டிய பாடம்

குறிப்பாக என்னை வற்புறுத்தி பதவி விலக முயற்சித்தால், நான் ஆபத்தானவனாக மாறக்கூடும். வருகின்ற மார்ச் 23ம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்து பேரணி தோல்வியில் தான் முடியும். நான் தெருவில் இறங்கி நடந்தால்,  உங்களுக்கு ஒளிந்து கொள்வதற்கு கூட இடம் கிடைக்காது. எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான ஷேபாஸ் சரீப்பை இந்த தேசத்தின் குற்றவாளியாக பார்க்கிறேன் என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

Pakistani PM has been sharply criticized by opposition parties

மேலும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான நவாஸ் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைத்து தப்பித்து வருகிறார். அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் மிரட்டுகின்றன. இந்த அரசு தற்போதைய பதவிக் காலத்தை நிறைவு செய்து அடுத்த பொதுத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்யாணம் ஆன 4 மாதத்தில் கணவனுடன் சண்டை... கோபித்துக் கொண்டு வந்த பெண்ணுக்கு ரயில் நிலையத்தில் காத்திருந்த ஷாக்

Tags : #PAKISTANI PM IMRAN KHAN

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pakistani PM has been sharply criticized by opposition parties | World News.