ஊரடங்கு ரூல்'ஸ மீறி 'கார்'ல வெளிய வந்திருக்காரு... பிரபல 'கிரிக்கெட்' வீரரின் காரை பறிமுதல் செய்த சென்னை 'போலீஸ்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி வரும் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேவையில்லாமல் பொது இடங்களில் வாகனங்களில் சுற்றி திரிபவர்களை கண்காணித்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை அடையாறு பெசன்ட் நகரில் வசித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங், காய்கறி வாங்குவதற்காக தனது காரில் வெளியே வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ராபின் சிங்கின் காரை சென்னை போக்குவரதுப்பிரிவு போலீசார் போலீசார் பறிமுதல் செய்தனர். பொதுவாக, தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் தான் அத்தியாவசிய தேவைகளுக்காக ஒருவர் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறி வேறு பகுதிக்கு வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொது முடக்கம் முடிந்த பின் தான் கார் திருப்பி கிடைக்கும் என போலீசார் தெரிவித்த நிலையில், ராபின் சிங் தனது நண்பரை அழைத்து கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
