5 மாவட்டங்களுக்கு 'அதிகம்' நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு... 'இறைச்சி' கடைகளுக்கு அனுமதி உண்டா?... தளர்வுகள் என்னென்ன?... முழுவிவரம் உள்ளே !
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. ஜூலை 31 வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். சென்னை, மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மட்டும் ஜூலை 5 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு குறித்த முழுவிவரங்களை கீழே காணலாம்:-
* ஜூலை 5 ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுகிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்
* மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்
* மாவட்டங்களுக்குள் தனியார் மற்றும் அரசுப் போக்குவரத்து ஜூலை 1 - ஜூலை 15 வரை தற்காலிகமாக நிறுத்தம்
* ஜூலை 6-ம் தேதி முதல் கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனம் அனுமதி
* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி தரிசனம் அனுமதிக்கப்படாது
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்
* மதம் சார்ந்த வழிபாடுகள், சுற்றுலா தலங்களுக்கு தடை நீட்டிப்பு
* சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் அனுமதிபெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்
* திருமணம், இறுதிச்சடங்குகளில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி
* பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கு தடை தொடரும் என்றும், ஆன்லைன் கல்விக்கு தடையில்லை என்றும், மாவட்டம், மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட ஐடி நிறுவனங்கள் ஜூலை 6-ம் தேதி முதல் அதிகபட்சமாக 80 பேருடன் இயங்கலாம்.
*தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
*மால்கள் தவிர்த்து ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம். குளிர்சாதன வசதி பயன்படுத்த கூடாது.
* உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ணலாம். சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட வேண்டும். குளிர்சாதன வசதி பயன்படுத்த கூடாது.
*தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
*வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, பயன்படுத்தலாம்.
*ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.
*முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
*மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.