‘ஒரே நாளில் 118 பேர் பலி!’.. ‘தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் மட்டும் எத்தனை பேர்?’.. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விபரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று மட்டும் 65 ஆயிரத்து 872 பேரின், 67 ஆயிரத்து 553 மாதிரிகளை பரிசோதித்தில், மேலும் 5 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை கொரோனாவினால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தமாக 5 ஆயிரத்து 43 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தற்போது கொரோனா சிகிச்சையில் மட்டும் 58 ஆயிரத்து 289 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்பைப் பொருத்தவரை இன்று மட்டும் தமிழகத்தில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4800-ஐ தாண்டியது.

மற்ற செய்திகள்
