'எங்களால சுத்தமா முடியல!.. தயவு செஞ்சு நீங்களே வேலயவிட்டு போயிடுங்க'!.. 22,000 ஊழியர்களை ஒரே மாதத்தில் வெளியேற்றிய கொடுமை!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் முன்னணி விமான நிறுவனங்களுள் ஒன்றான லுப்தான்சா, அதன் 65 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக சுமார் 1.7 பில்லியன் டாலர் இழப்பை இரண்டாம் காலாண்டில் சந்தித்துள்ளது.

ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லுப்தான்சா விமான நிறுவனம், கொரோனா பாதிப்பால் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ளது.
ஊரடங்கு காரணத்தால் பன்னாட்டு விமானப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப் போல விமான சேவைகள் மீண்டும் தொடர, குறைந்தது 2024ம் ஆண்டு வரையாவது தேவைப்படும் என்ற அதிர்ச்சி தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும், இரண்டாம் காலாண்டின் முடிவில், லுப்தான்சா நிறுவனத்துக்கு சுமார் 1.7 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்து 9 பில்லியன் யூரோ நிதியுதவி கிடைத்த பின்பும், மிக மோசமான நிதி நெருக்கடியால் 22,000 ஊழியர்களை நீக்குவதாக லுப்தான்சா தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாகவே அங்கு, சுமார் 8 ஆயிரம் ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்திருந்தனர். அதுமட்டுமின்றி 75,000 ஊழியர்கள் குறைந்த நேரம் வேலை செய்து வந்தனர். இத்தகைய நிலையில், லுப்தான்சா நிறுவனத்தின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
