VIDEO: இசை வெளியீட்டு விழா சர்ச்சை.. “எப்பவும் போல நார்மலா பேசப்போறோம்னு நினைச்சுதான் போனேன்”.. அஸ்வின் கொடுத்த விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்என்ன சொல்ல போகிறாய் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து அஸ்வின் விளக்கம் கொடுத்துள்ளார்.

டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். இதில் அவந்திகா, தேஜூ அஸ்வினி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். இதற்கு விவேக்-மெர்வின் இசை அமைத்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 6-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது அஸ்வின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்த சர்ச்சை குறித்து அஸ்வின் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், ‘என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு நடந்த விஷயங்கள் என்னை மிகவும் பாதித்தது. அன்று என்னுடைய முதல் பட விழா. அதனால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். விழா மேடையில் அவ்வளவு கூட்டத்திற்கு முன் பேசுவதற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
பொதுவாக எங்கு பேசச் சென்றாலும் பேச வேண்டிய விஷயங்களை முன் கூட்டியே எழுதி வைத்துக் கொண்டு பேசக்கூடிய பழக்கம் என்றுமே எனக்கு இருந்ததில்லை. எப்போதும் போல நார்மலாக பேசப்போகிறோம் என்று நினைத்துதான் சென்றேன். கூட்டத்தைப் பார்த்ததும் என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை.
அப்படி பேசும் பொழுது நான் என்ன பேசுகிறேன் என்பது தெரியாமல் சில விஷயங்களைச் சொல்லி விட்டேன். நான் பேசி முடிக்கும் போது கூட நான் எதோ உளறுகிறான் என்று கூட அதே மேடையில் குறிப்பிட்டுள்ளேன். நான் பேசியது நிறைய பேரைக் காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்’ என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
