'இந்த டெபிட் கார்டு எல்லாம் க்ளோஸ் பண்ணுங்க'... 'ரிசர்வ் பேங்க் அதிரடி' ... அதிர்ச்சியில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 80 கோடி டெபிட் கார்டுகளும், 5 கோடி கிரெடிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இந்த கார்டுகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி சமீபத்தில் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளும் மேக்னட் ஸ்டிரிப்புக்கு பதில் சிப் வசதிக்கு மாற்றி கொள்ளும் படி உத்தரவிட்டது. இதனால் ஒருமுறை கூட பயன்படத்தாத கார்டுகளைக் கூட வங்கிகள் மாற்றித் தர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் இதுவரை ஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ரத்து செய்துவிடும்படி ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் புதிய வழிகாட்டுதலை அனுப்பியுள்ளது. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டிலிருந்து ஆன்லைன் பரிவர்த்தனை வசதி நீக்கப்பட்டு விட்டால் அதன் பிறகு விண்ணப்பம் அளித்தே அந்த வசதியை பெற முடியும்.
இதற்கிடையே ஆன்லைன் பரிவர்த்தனைக்கு கார்டுகளை பயன்படுத்தாதவர்கள் பெரும்பாலும் ஊரக பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மினிமம் பேலன்ஸ் வைக்கவில்லை என்பதற்காக, கோடி கணக்கில் பயனாளர்களிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு மக்களுக்கு மேலும் சுமையாக அமையும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே ஆன்லைன் பரிவர்த்தனைக்கு உபயோகப்படுத்தாத கார்டுகளின் விவரங்களை திருடியே மோசடி நடைபெறுவதால், அதனை தடுக்கவே ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிதி ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.