'எடுத்துக்கோங்க...! கொரோனா நிவாரண நிதிக்கு வச்சுக்கோங்க...' 'பிச்சை எடுத்து...' 'சிறுக சிறுக சேமிச்ச பணத்தை...' நல்ல மனம் படைத்த தாத்தா...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அனைத்து பொருளாதாரம் மாற்று எல்லா வித வசதிகளும் இருக்கும் ஒரு சிலர் பேரிடர் காலத்திலும், பிறருக்கு துன்பம் ஏற்படும் நேரத்திலும் உதவ வருவதில்லை. ஆனால் எந்த வசதியும் இல்லாமல் தான் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தாலும் அதிலிருந்து சேர்த்து வைத்த ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் ஒரு முதியவர்.
பூல் பாண்டியன் என்னும் தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு சேர்ந்த முதியவர் பல காலங்களாக பிச்சை எடுத்து வருகிறார். பல ஊர்களுக்குச் சென்று பிச்சை எடுத்து வரும் இவர் தனக்கு கிடைக்கும் பணத்தில், தன் தேவைக்கு போய் மீதம் இருக்கும் பணத்தை சேர்ந்து வைப்பதை தன் பழக்கமாக உடையவர்.
அவ்வாறு சேர்த்து வைக்கும் பணம் அதிக தொகையாக மாறிய பின் நல்ல காரியங்களுக்கு தானம் செய்து வந்துள்ளார். இதுவரை பாண்டி தாத்தா பல பள்ளிகளுக்கு டேபிள், சேர், தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரை வந்த அவர், இங்கு பல இடங்களிலும் பிச்சை எடுத்து குறிப்பிட்ட தொகையை சேகரித்து வைத்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக சாலை ஓரம் வசிப்பவர்கள், பிச்சை எடுக்கும் முதியவர்களை, மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட தங்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலைத்தில் இருந்த பாண்டி தாத்தாவையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
காப்பகத்திற்கு சென்ற தாத்தா தற்போதைக்கு தனக்கு எந்த செலவும் இல்லை என உணர்ந்து தான் சேமித்து வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார் பூல் பாண்டியன் தாத்தா.