'தீபாவளி' சிறப்பு பேருந்துகள் 'முன்பதிவு'...உங்க 'பஸ்' எந்த ஏரியான்னு தெரிஞ்சுக்கங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Sep 19, 2019 02:06 PM
வருகின்ற தீபாவளி (அக்டோபர் 27) பண்டிகையையொட்டி முன்பதிவு பேருந்துகள் குறித்த சிறப்பு விவரங்களை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று தலைமைச்செயலக வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,''தீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவு அக்டோபர் 23-ம் தேதி முதல் தொடங்கும்.ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும்.
தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸில் இருந்து இயக்கப்படும்.வேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும்.மொத்தம் 5 இடங்களில் சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். மதுரை, திருநெல்வேலி, கோவை,ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி முடிந்து மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அபராதத் தொகை குறைத்து அரசாணை வெளியிடப்படும்.இந்த வருடம் ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.அங்கு பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அதிகாரிகள் ஆய்வு செய்தபின்னர் தான், இறுதி முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.
