நடிகர் செந்தில் முதுகில் எட்டி உதைச்ச ரசிகர்.. மிதிச்சதுக்கு அப்புறம் சொன்ன காரணம்.. ஷூட்டிங்கில் நடந்த THROWBACK சம்பவம்!! நினைவுகூர்ந்த நடிகர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Nov 24, 2022 10:47 AM

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக கொடி கட்டி பறந்தவர் நடிகர் செந்தில். அவரது பேச்சும், வெள்ளிந்தியாக முக பாவனைகள் கொண்டு ரசிகர்களை சிரிக்க வைப்பதும் அவரின் ஸ்பெஷாலிட்டி ஆகும்.

actor sugumar about senthil kicked by fan in shooting spot

Also Read | Vijay : Fans Meet-க்கு வந்த காரில் கருப்பு நிற ஸ்டிக்கர்..! நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதமா? - முழு விபரம்.

அதிலும் குறிப்பாக, மற்றொரு காமெடி நடிகர் கவுண்டமணியுடன் சேர்ந்து செந்தில் நடித்துள்ள காமெடி காட்சிகள், எந்த காலத்திற்கும் எவர்க்ரீனாக இருக்கும் ஒன்றாகும்.

இன்றளவிலும் மக்களை சிரிக்க வைக்கக் கூடிய வகையில் அவை இருப்பதால், கவுண்டமணி - செந்தில் காமெடி காம்போவை முறியடிக்கவே முடியாது என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருவார்கள். தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வரும் செந்தில், தானா சேர்ந்த கூட்டம், பிஸ்தா உள்ளிட்ட திரைப்படங்களிலும் சமீபத்தில் நடித்திருந்தார்.

actor sugumar about senthil kicked by fan in shooting spot

அப்படி ஒரு சூழலில், நடிகர் சுகுமார், செந்திலுக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள கருத்து, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. காதல், வசூல்ராஜா எம்பிபிஎஸ், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தும் ஒரு சில படங்கள் இயக்கியும் உள்ளவர் சுகுமார். காதல் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மூலம் 'காதல்' சுகுமார் என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது.

அப்படி ஒரு சூழலில், 'காதல் சாதி' என்னும் திரைப்படத்தில் நடிகர் செந்திலின் பேரனாக நடித்த போது அவருடன் நடந்த உரையாடல் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை நடிகர் சுகுமார் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில், செந்திலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சுகுமார், அப்போது நடந்த உரையாடலையும் விளக்கி உள்ளார்.

actor sugumar about senthil kicked by fan in shooting spot

"எனது முதல் திரைப்படமான "காதல் சாதி"யில் செந்தில் அண்ணன் பேரனாக நடித்திருந்தேன். அப்போது அண்ணனிடம் எதாச்சும் பேசிக் கொண்டே இருப்பேன்.  அண்ணே எல்லாரையும் சிரிக்க வைக்கிற, உங்கள சங்கடப்படுத்துற மாதிரி எதாச்சும் இருக்காண்ணே?" என சுகுமார் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த செந்தில், "ரொம்ப வருசத்துக்கு முன்னால பொள்ளாச்சிப் பகுதியில் ஒரு படப்பிடிப்பு நடக்கும்போது ஏகப்பட்ட கூட்டம் வேடிக்கை பார்க்க கூடியிருந்துச்சி... ஒரு மேடான பகுதியில நான் தரையில ரிலாக்ஸா உக்காந்துட்டு இருந்தேன். திடீர்னு கூட்டத்துல ஒருத்தன் முதுகுல உதைச்சிட்டான்.. நிலைகுலைஞ்சி மேட்டுல இருந்து உருண்டு கீழ விழுகிறேன்.. கூட்டத்துல கொஞ்சபேரு கைதட்டி சிரிக்கிறாங்க.. ஊர்மக்களும் படத்துல வேலை செஞ்சவங்களும் அவனை பிடிச்சி ரெண்டு போடுபோட்டு ஏண்டா இப்டி பண்ணேன்னு கேட்டா..

actor sugumar about senthil kicked by fan in shooting spot

'படத்துல கவுண்டமணி உதைச்சா அண்ணே வலிக்காத மாதிரி நடிக்கிறாரு.. நான் உதைச்சாலும் அப்டித்தான் பண்றாரான்னு பார்த்தேன்னு' சொல்லவும்.. அவனை திட்டி மன்னிப்பு கேட்க வைக்க அடிக்கவே "அதெல்லாம் ஒண்ணும் வேணாம் அவனை விட்ருங்க தெரியாம ஏதோ பண்ணிட்டான்" என செந்தில் கூறியதை சுகுமாரிடம் நினைவு கூர்ந்துள்ளார்.

இதுகுறித்து விளக்கிய சுகுமார், கடைசியில், "அந்த மனதுதான் செந்தில் அண்ணன்.!! #இப்படி பொது இடங்களில் சூட்டிங்கின் போது பல சங்கடங்கள் நடிகர் நடிகைகளுக்கு நேரும்" என தெரிவித்துள்ளார். சினிமா ஷூட்டிங் பார்க்க கூடிய கூட்டத்தில் இருந்து ஒருவர் அடித்த போதும் அதற்கு செந்தில் சொன்ன பதில், தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்து வருகிறது.

Also Read | பங்களாதேஷ் தொடரிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை.. "இது தான் காரணமா?".. பிசிசிஐயின் Official லிஸ்ட் இது தான்!!

Tags : #SENTHIL #SUGUMAR #ACTOR SUGUMAR ABOUT SENTHIL KICK #FAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actor sugumar about senthil kicked by fan in shooting spot | Tamil Nadu News.