"நான் ஒன்னும் கிரிமினல் இல்லை, இப்டி பண்றது".. மனம் உடைந்து பேசிய டேவிட் வார்னர்.. என்ன நடந்துச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பை தொடர் சமீபத்தில் முடிவடைந்திருந்த நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக டி 20 உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது.
Also Read | "லாட்டரில பணம் ஜெய்ச்சும் இப்டி ஒரு ட்விஸ்ட்டா?".. மனைவி அக்கவுண்ட்டில் பணம் மாற்றியதும் நடந்த பரபரப்பு!!
இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இங்கிலாந்து அணி மோதி இருந்தது.
இந்த மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணியை வொயிட் வாஷ் செய்திருந்தது.
மேலும் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சிறப்பாக ஆடி இருந்தார். ஒரு சதம் ஒரு அரை சதத்துடன் 208 ரன்களும் எடுத்திருந்தார். அது மட்டுமில்லாமல், சுமார் 3 ஆண்டுகள் கழித்து சர்வதேச போட்டியில் வார்னர் சதமடித்துள்ளதால் அவரது ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடையவும் செய்திருந்தனர். இந்த நிலையில், சில பழைய விஷயங்களை நினைத்து தற்போது மனம் உருகி உள்ளார் டேவிட் வார்னர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி நடந்த போது பந்தை சேதப்படுத்தியது நிரூபிக்கப்பட்டதன் காரணமாக டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட 3 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து தடை விதிக்கப்பட்டிருந்தது. இதில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு 1 வருடம் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல், வாழ்நாள் கேப்டன்ஷிப் தடையும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
தடைக்காலம் முடிந்து மீண்டும் கிரிக்கெட்டில் ஜொலித்து வரும் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர், ஆஸ்திரேலிய அணியின் சிறந்த வீரர்களாகவும் வலம் வருகின்றனர். இந்த நிலையில், வாழ்நாள் கேப்டன்ஷிப் தடை குறித்து சமீபத்திய பேட்டியில் கண்ணீருடன் பேசி உள்ளார்.
"நான் ஒன்றும் கிரிமினல் இல்லை. நான் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்து விட்டேன். இன்றளவும் அதே குற்றத்தை மீண்டும் நினைவுபடுத்தி வாழ்நாள் கேப்டன்ஷிப் தடை இருப்பது அபத்தமான ஒன்று. கடந்த பிப்ரவரி மாதம், அடுத்த கேப்டன் குறித்த பேச்சு வார்த்தை எழுந்தது. எனது பெயரும் இடம்பெற்றிருந்த சமயத்தில், முன்பு நான் செய்த விஷயத்தை காரணம் காட்டி நிராகரித்துள்ளனர். என் மீதான வாழ்நாள் கேப்டன்சி தடையை நீக்குவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் அப்போது கேட்டுக் கொண்டேன். 9 மாதங்கள் ஆகியும் அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை.
என் வாழ்நாளில் நான் மறக்க கூடிய சிலவற்றில் அதுவும் ஒன்று. நானும் எனது குடும்பமும் மிகப் பெரிய கஷ்டத்தை சந்தித்து விட்டோம். மீண்டும் அதற்குள் செல்ல விரும்பவில்லை. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எனது பழைய விஷயங்களை நினைவுபடுத்தி பேசுவது வருத்தம் அளிக்கிறது. இனியும் அதே தடையை அவர்கள் தொடர்வது எனக்கு மனதளவில் மிகப்பெரிய வலியை கொடுக்கிறது" என மிகுந்த வேதனையுடன் உருக்கமாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
Also Read | "என் பைக் தொலைஞ்சு போச்சு, Pray பண்ணுங்க".. லடாக் போன TTF வாசன் பகிர்ந்த வீடியோ!!.. பரபரப்பு பின்னணி!!