VIDEO: ‘அட நானும் ப்ளேயர் தான்.. இங்க கொஞ்சம் பாருங்க’!.. இந்தியா ஜெர்சியில் ‘அட்ராசிட்டி’ செய்த நபர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின்போது ரசிகர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 364 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளும், ராபின்ஷன் மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளும், மொயின் அலி 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 391 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் அடித்து அசத்தினார். இந்திய அணியைப் பொறுத்தவரை முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
தற்போது இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. இதுவரை 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் ரிஷப் பந்த் 14 ரன்களும், இஷாந்த் ஷர்மா 4 ரன்னுடம் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து மைதானத்துக்குள் ஓடி வந்தார். உடனே பாதுகாவலர் அவரை அழைத்துச் செல்ல முயன்றார். அப்போது தான் இந்திய அணியின் ஜெர்சி அணிந்திருப்பதாகவும், நானும் ஒரு ப்ளேயர்தான் என கூறி வெளியேற மறுத்துவிட்டார்.
Meet Jarvo 😃 he say, “Yes, I am Jarvo that went on the pitch. I am proud to be the first white person to play for India”. 😃😃
Million views already to this video @BMWjarvo 🙏#INDvsENG #ENGvIND #INDvENG pic.twitter.com/gc2LIESaXL
— Karamdeep #ENGvIND (@oyeekd) August 15, 2021
JARVO's entry in the stadium and almost making it to play for #TeamIndia before he got caught. 😁😁#ENGvIND #INDvENG #INDvsENG pic.twitter.com/R7OUNwOqVy
— Karamdeep #ENGvIND (@oyeekd) August 15, 2021
இதனை அடுத்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் சிறிதுநேரம் போட்டி தடைபட்ட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.