கிரிக்கெட் வீரரின் 'திருமண' வரவேற்பில்.. செம 'ஆட்டம்' போட்ட பிரபலம்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 07, 2019 07:01 PM

கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே-அஷ்ரிதா ஷெட்டி திருமணம் கடந்த டிசம்பர் 2-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து இவர்களின் திருமண வரவேற்பு டிசம்பர் 5-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Yuvraj Singh dances at Manish Pandey\'s wedding reception

விழாவில் கலந்து கொண்ட கிரிக்கெட் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் பஞ்சாபி பாடலுக்கு செம ஆட்டம் போட்டார். இவரின் ஆட்டத்தை பார்த்த அனைவரும் வியந்து போயினர். அந்தளவுக்கு யுவராஜ் மிகவும் சிறப்பாக ஆடினார். இந்த வீடியோ தற்போது ட்விட்டர், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மனிஷ் பாண்டே தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.