தெரியாம 'ரிஜெக்ட்' பண்ணிட்டோம்.. இந்த வாட்டி 'தம்பிய' எடுத்தே ஆகணும்.. போட்டிபோடும் அணிகள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 05, 2019 12:31 AM

கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகின்ற 19-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 73 இடங்களுக்கு உலகம் முழுவதும் இருந்து 971 வீரர்கள் போட்டிபோடுகின்றனர். இதனால் இந்தமுறை ஏலத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்று தோன்றுகிறது.

Tamil Nadu Spinner Create a demand for himself on IPL

இந்தநிலையில் சமீபத்தில் முடிவுக்கு வந்த சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மீது, ஐபிஎல் அணிகளின் கவனம் விழுந்துள்ளது. குறிப்பாக தமிழக அணியின் இளம் பந்துவீச்சாளர் சாய் கிஷோருக்கு இந்தமுறை மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2 வருடங்களாக ஐபிஎல்லில் விளையாடுவதற்காக ரிஜிஸ்டர் செய்தும், பெரிதாக எந்த அணியும் சாய் கிஷோரை வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இந்தமுறை நிலை தலைகீழாக மாறிவிட்டது. சையது முஷ்டாக் அலி தொடர் முழுவதும் கட்டுப்பாடாக பந்துவீசி 20 விக்கெட்டுகளை சாய் வீழ்த்தி இருப்பதுதான் அதற்கு காரணம். 12 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் எடுத்துள்ள சாய் கிஷோரின் எகனாமி 4.63 ஆக இருக்கிறது.

மற்றொரு பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இருந்தபோதும் தமிழக அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் சாய் கிஷோருக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் மீதான பார்வை சாய் கிஷோர் மீது விழுந்துள்ளது. ரசிகர்களும் சாய் கிஷோரை எடுக்குமாறு ஐபிஎல் அணிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #IPL #CRICKET