VIDEO: விக்கெட் 'எடுத்த' மகிழ்ச்சியில்.. 'ரியல்' மேஜிக்மேனாக மாறிய பவுலர்.. ரசிகர்கள் ஆரவாரம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 05, 2019 01:27 PM

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க பவுலர் தப்ரைஸ் ஷம்சி மேஜிக்மேனாக மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

South Africa bowler Tabraiz Shamsi celebrates wicket with magic trick

நம் ஊர் ஐபிஎல் தொடர் போல தென் ஆப்பிரிக்காவில் MZANSI சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் பார்ல் ராக்ஸ் அணிக்காக களமிறங்கிய ஷம்சி டர்பன் ஹீட் அணிக்கு எதிராக பந்து வீசினார். ஷம்சியின் பந்தில் பேட்ஸ்மேன் விஹாப் லுப்பே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதைக்கண்ட ஷம்சி விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் மேஜிக் செய்து காட்டினார். தன்னுடைய பாக்கெட்டில் இருந்து சிவப்பு நிற கைக்குட்டையை எடுத்த ஷம்சி, அதை இழுத்து நீளமான குச்சியாக மாற்றினார். இதைக்கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #CRICKET