‘கணவரைக் கொன்று தலையுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்த பெண்..’ அதிர்ச்சியில் உறைந்த காவலர்கள்..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | May 30, 2019 11:19 PM
அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கொடுமை செய்ததால் கணவரைக் கொன்று அவர் தலையுடன் மனைவி காவல் நிலையத்துக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்கிம்பூர் பகுதியைச் சேர்ந்த குணேஸ்வரி பர்கத்தகி (48) அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு பிளாஸ்டிக் பை ஒன்றுடன் சென்றுள்ளார். காவலர்கள் அந்த பையை சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று இருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், “அது என்னுடைய கணவருடைய தலை. அவர் தொடர்ந்து என்னை மிகவும் கொடுமை செய்து வந்ததால் கொலை செய்தேன். சரணடைய வந்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 5 குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண்ணைக் கைது செய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : #WIFEKILLSHUSBAND
