'நான் நம்பர் 1 தான், ஆனா...' என்னைய விட 'அவங்க ரெண்டு' பேரும் தான் சிறந்த ப்ளேயர்ஸ்...! - கேன் வில்லியம்சன் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் 3வது இடத்திற்கு சறுக்கினார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 9 புள்ளிகளை இழந்தாலும் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். 2020-ம் ஆண்டில் ஸ்மித் 313 நாட்களும், கோஹ்லி 51 நாட்களும் முதலிடத்தில் இருந்துள்ளனர். டாப்-10 பட்டியலில் இந்திய வீரர்கள் ரகானே 6-வது இடத்திலும், புஜாரா 10-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில், தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள கேன் வில்லியம்சன் கூறியிருப்பதாவது, என்னைப் பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தான் சிறந்த வீரர்கள். இருப்பினும் நான் முதலிடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளிக்கிறது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கோலி பேட்டிங்கில் அனைத்து வடிவங்களிலும் ஆண்டுக்கு ஆண்டு முன்னேற்றமடைந்து கொண்டே செல்கின்றனர்.
அவர்கள் இருவரும் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு செல்கின்றனர். அவர்களுக்கு எதிராக விளையாடுவதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். பாகிஸ்தான் முன்வைத்த போராட்டம் வலுவாக இருந்தபோதிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். டெஸ்ட் போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு போட்டி போடுவது மிகவும் உற்சாகமானது என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
