'யூபிஐ பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் முதல் அதிகரிக்கும் கார் விலை வரை'... 'இன்று முதல் அமலாகும் 8 முக்கிய மாற்றங்கள்'... மக்களே தெரிஞ்சுக்கோங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jan 01, 2021 03:35 PM

புத்தாண்டு பிறந்துவிட்ட நிலையில், இன்று முதல் அமலுக்கு வரும் 8 முக்கிய மாற்றங்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்வோம்.

8 rules to be changing from January 1st 2021

வங்கிகளில் Positive Pay mechanism for cheques என்ற புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் காசோலை (Cheque) வாயிலாகப் பணப்பரிவர்த்தனை செய்யும் ஒருவர் அந்தக் காசோலை யாருக்கு வழங்கப்படுகிறது, என்ன தேதியில் வழங்கப்படுகிறது, எவ்வளவு தொகைக்கு வழங்கப்படுகிறது போன்ற தகவல்களை வங்கிகளுக்குத் தர வேண்டும். வாடிக்கையாளர் அளிக்கும் தகவல்களை வங்கிகள் சரிபார்த்த பின்னரே பணப்பரிவர்த்தனைக்கு அனுமதிக்கும்.

இதன் மூலம் காசோலை மோசடிகளைப் பெருமளவு குறைக்க முடியும் என ஆர்.பி.ஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த நடைமுறையானது 5 லட்சம் ரூபாய்க்கு மேல் காசோலை வழியாக பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு மட்டுமே கட்டாயம் என விளக்கம் அளித்துள்ள ஆர்.பி.ஐ, மற்றவர்களுக்குக் கட்டாயம் இல்லை என கூறியுள்ளது.

8 rules to be changing from January 1st 2021

மேலும் வாடிக்கையாளர் தற்போது டெபிட் கார்டு (Debit card) அல்லது கிரெடிட் கார்டு (Credit card) வாயிலாகப் பணம் செலுத்தும்போது பின் நம்பர் செலுத்தாமல் 2,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய முடியும். இதில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆர்.பி.ஐ, ஜனவரி 1 முதல் அதன் உச்சவரம்பு 5,000 ரூபாயாக உயர்த்தப்படும் எனக் கூறியுள்ளது. அதே நேரத்தில் இந்த வசதியானது வாடிக்கையாளர் வங்கிகளில் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே இந்த உச்சவரம்பு அவர் கணக்கில் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 rules to be changing from January 1st 2021

ஜிஎஸ்டி தாக்கல் செய்வதில் ரூ. 5 கோடிக்கும் கீழ் வருமானம் ஈட்டும் சிறிய நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்தால் போதும். இதன் மூலம் வருடத்துக்கு 12 முறை கணக்கு தாக்கல் செய்வதற்குப் பதில் நான்கு முறை கணக்கு தாக்கல் செய்தால் போதுமானது. ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் நிறுவனங்கள் தனித்தனியாக GSTR -1 மற்றும் GSTR - 3B கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்.  ஜி.எஸ்.டி வரி கணக்கு தாக்கல் செய்வதை எளிமை ஆக்குவதற்காக புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இதனிடையே புத்தாண்டிலிருந்து கார்களின் விலையை உயர்த்த கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி, மாருதி, மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் நாளை முதல் உயரவுள்ளது. இதேபோல், மற்ற நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்றுமுதல் கூகுள், ஃபோன் பே உள்ளிட்ட பிரைவேட் யூபிஐ செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பணப்பரிவர்த்தனை அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும், G Pay பயன்படுத்துபவர்களுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

8 rules to be changing from January 1st 2021

மேலும் எல்பிஜி சிலிண்டர் விலை நிர்ணயம் செய்வதிலும் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி சிலிண்டர் விலை ஒவ்வொரு வாரமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படும். இதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்காததால் உடனடியாக இந்த மாற்றம் இல்லை என்றாலும், விரைவில் இதுவும் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு முறை சிலிண்டர் வாங்கும்போது விலை மாறுபடலாம்.

ஜனவரி 15 முதல் வீட்டில் உள்ள தொலைப்பேசியில் (Landline) இருந்து மற்ற கைப்பேசி அழைப்புகளை அழைக்கும்போது 0 சேர்த்து அழைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய விதிமுறைப்படி வீட்டு தொலைப்பேசியில் இருந்து கைப்பேசியை அழைத்தால் மட்டுமே 0 சேர்க்க வேண்டும். லேண்ட்லைன் டூ லேண்ட்லைன் (Landline to landline) அல்லது மொபைல் டூ லேண்ட்லைன் (Mobile to landline) பேசும்போது 0 சேர்க்க வேண்டாம்.

8 rules to be changing from January 1st 2021

இதனிடையே சில குறிப்பிட்ட ஆன்ட்ராய்டு iOS உடைய செல்போன்களில் ஜனவரி 1, 2021 முதல் வாட்ஸ் ஆப் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  i phone s, i phone 5, i phone 5s மற்றும் ஆன்ட்ராய்டு உள்ளிட்ட செல்போன் மாடல்களில் வாட்ஸ் ஆப் இயங்காது. மேலும், ஆண்ட்ராய்டு(Android) 4.0.3 Operating system-ல் இயங்காத ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 8 rules to be changing from January 1st 2021 | India News.