'போட்டியின்போது வம்பிழுத்த ரிஷப் பந்த்தை'... 'நொடியில் கலாய்த்து சீண்டிய ஆஸி. வீரர்?!!'... 'ஸ்டெம்ப் மைக் ஆடியோவுடன் வைரலாகும் வீடியோ!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றைய போட்டியின்போது ரிஷப் பந்த் - மேத்யூ வேட் இடையே நடந்த உரையாடல் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டியான இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 195 ரன்களும், இந்தியா 326 ரன்களும் எடுத்துள்ளன. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் துவங்கிய ஆஸ்திரேலிய அணியில், பெர்ன்ஸ், லபுஷேன், ஸ்மித் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்த சூழலில், தொடக்க வீரர் மேத்யூ வேட் தொடர்ந்து களத்திலிருந்து இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டார்.
இந்நிலையில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஸ்டெம்புக்கு பின்னிருந்து மேத்யூ வேட்டை வம்பிழுத்துக் கொண்டிருந்தார். குறிப்பாக பும்ரா பந்து வீசிய ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 25வது ஓவரின் முதல் பந்தை மேத்யூ வேட் லெக் சைடில் தட்டி விட அதற்கு உடனே ரிஷப் பந்த் , 'இந்த பந்தில் நீ அவுட்டாகி இருக்க வேண்டுமென்ற தொனியில், ஹி...ஹி...ஹி... என நக்கல் செய்தார். அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் விதமாக மேத்யூ வேட், ஹி...ஹி...ஹி... என்ன நீயே உன்னை பெரிய திரையில் பார்க்கிறாயா மறுபடியும்? எனக் கிண்டலடித்துள்ளார்.
இந்த உரையாடல் அங்கிருந்த ஸ்டெம்ப் மைக்கில் பதிவாக, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதோடு முன்னதாக ரிஷப் பந்த் ஸ்டெம்ப் பின்னால் நின்று கொண்டு ஆஸி. வீரர்களை கேலி செய்து, இந்திய பவுலர்களை சப்தமாக ஊக்குவிக்க, அதில் கடுப்பான மேத்யூ வேட் 16வது ஓவர் முடியும் தறுவாயில் ரிஷப் பந்த்திடம், "நீ 25 கிலோ எடை அதிகம். 20 கிலோவா 25ஆ அல்லது 30 கிலோவா? உன்னை பெரிய திரையில் பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது" எனக் கேலி செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
The Wade-Pant verbals continue 🗣🍿 #AUSvIND pic.twitter.com/VjZ9hDm24I
— cricket.com.au (@cricketcomau) December 28, 2020
— pant shirt fc (@pant_fc) December 28, 2020

மற்ற செய்திகள்
