‘அணியில் இணைய உள்ள சீனியர் வீரர்’... ‘கேப்டன் சொன்ன நம்பிக்கை தகவல்’... ‘நாளை முதல் அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்திய அணி’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதனிமைப்படுத்தப்பட்டு இருந்த இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா நாளை முதல் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 13-வது சீசனில் சில போட்டிகளில் ரோகித் சர்மா, தனது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. பின்னர் பிளேஆப் சுற்றின் போதும் இறுதிப் போட்டியின் போதும் சரியான நேரத்தில் மீண்டும் அணிக்குள் இணைந்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார் ரோகித் சர்மா.
இந்நிலையில் அந்த ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய வீரர்களின் தேர்வில், ரோகித் சர்மாவின் காயத்தை கணக்கில் கொண்டு அவரை ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் இந்திய நிர்வாகம் சேர்க்கவில்லை. பின்னர் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் என பலரும் ஆதரவு குறித்து கருத்துக்களை கூறியதால் உடனே ரோகித் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
இருப்பினும் அவர் ஆஸ்திரேலியா செல்லாமல் நேராக இந்தியா திரும்பி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டார். உடற்தகுதி பெற்றாலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆஸ்திரேலியா சென்று 14 நாட்கள் குவாரன்டைன் இருக்க வேண்டும் என்ற விதிகளால் அவரால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியவில்லை.
இதனால் ஜனவரி 7-ம் தேதி துவங்க உள்ள 3-வது போட்டியில் இருந்து அவர் விளையாடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டநிலையில், நேற்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே, ‘3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து ரோகித்திடம் நான் நேற்று இரவே பேசினேன்.
அவர் எப்போது அணியில் இணையப் போகிறேன் என்று காத்துக் கொண்டிருக்கிறார். நாங்களும் அவரது வரவுக்காக காத்திருக்கிறோம்’ என்று கூறினார். இதையடுத்து நாளை முதல் இந்திய அணியின் பயோ பபளில் இணைந்து, ரோகித் சர்மா பயிற்சி ஆட்டங்களை ஆடவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்
