அவராகவே 'அப்படி' நினைத்து சொல்லிருக்கலாம் ... இதனால்தான் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை... பயிற்சியாளர் தகவல்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Jan 23, 2020 10:54 AM

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்ட்யா ஏன் சேர்க்கப்படவில்லை என்ற காரணம் இப்போது வெளியாகியுள்ளது.

Why did Hardik Pandya not have a place in the Indian team?

முதுகில் காயமடைந்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஹர்திக் பாண்ட்யா அண்மையில் அளித்த பேட்டியில் தான் முழு உடற்தகுதி பெற்றுவிட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா ஏன் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்று அவரது பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள ஹர்திக் பாண்ட்யாவின் பயிற்சியாளர் எஸ்.ரஜ்னிகாந்த் "ஹர்திக் பாண்ட்யா தான் உடற்தகுதி இருப்பதாக நினைத்து அப்படி கூறியிருக்கலாம். அவர் யோயோ சோதனையில் வெற்றிப் பெறவில்லை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் பந்துவீச்சுக்காக நடத்தப்பட்ட சோதனையில் அவா் தோ்ச்சி பெறவில்லை.

சா்வதேச ஆட்டங்களில் ஏற்படும் அழுத்தத்தை தாங்க முடியாமல்போகும் என்பதால், அவா் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சோ்க்கப்படவில்லை. அதற்கு முன்பாக அவா் பரோடா அணி சார்பில் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஆட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது" என கூறியுள்ளார்.

Tags : #CRICKET #HRITHIKPANDYA