‘2 முறை ஆட்டம் காட்டிய தினேஷ் கார்த்திக்’.. ‘விஜய் சங்கர் கையாண்ட அதிரடி செயல்’.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 21, 2019 08:01 PM
வார்னர், பேர்ஸ்ட்டோவின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் டி20 லீக்கின் 38 -வது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 10 -ல் கொல்கத்தா அணியும் 6 -ல் ஹைதராபாத் அணியும் வென்றுள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 51 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 15 ஓவர்களின் முடிவில் 161 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஜானி பேர்ஸ்ட்டோ 43 பந்துகளில் 80 ரன்களும், வார்னர் 38 பந்துகளில் 67 ரன்களும் எடுத்து அசத்தினர்.
WATCH: Shankar's bullet throw sends DK packing
— IndianPremierLeague (@IPL) April 21, 2019
Full video here 📽️📽️https://t.co/q2pkPCnQcu #SRHvKKR pic.twitter.com/SohPsLvOqg
