‘சும்மா சிலம்பத்தை சுழட்டி எடுத்த ஹர்பஜன்’.. மரண மாஸ் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 20, 2019 06:18 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சிலம்பம் சுற்றி அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 -ல் வெற்றியும் 2 -ல் தோல்வியடைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
இதனை அடுத்து நாளை(21.04.2019) பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு ராயல் சேல்ஞ்சர்ஸ் அணியுடன் சென்னை அணி மோதுகிறது. இதற்கு முன்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை அணியின் வீரர்கள் சிலம்பம் சுற்றும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
The whip of the silambam! Bhajju pa's, 'Singa Thamizhan, Thanga Thamizhan' moment! #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/YSdq9cKF1M
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2019
Chennai Super Kings... or Ninjas? Catch the Lions nailing the Silambam like Super Local Bosses! #SuperLocalChallenge #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/77Aom06LbW
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2019
