‘இவரு இல்லாம ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்’.. கூறிய சிஎஸ்கே பயிற்சியாளர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 21, 2019 05:44 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியின் பங்களிப்பு அவசியம் தேவை என அணியின் பயிற்சியார் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

Dhoni\'s absence has impact on team and captaincy, says CSK coach

ஐபிஎல் டி20 லீக் 12வது சீசனின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த முறை ஹைதராபாத் அணியுடனான போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு இப்போட்டியில் தோனி விளையாடாததே மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று(21.04.2019) நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொள்கிறது. இப்போட்டியில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தோனி குறித்து கூறிய சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்,‘தோனி போன்ற சிறந்த வீரர் அணியில் இல்லாமல் போனால், அந்த இடத்தை சரி செய்ய கடினமாக ஒன்றாக இருக்கும். தோனி இல்லாமல் வெற்றி பெறுவது என்பது கடினமான விஷயம்தான்’ என அவர் கூறியுள்ளார்.

Tags : #IPL #IPL2019 #CSK #MSDHONI #YELLOVE #WHISTLEPODU