‘தொடர் தோல்வி, கடும் விமர்சனம்’.. ஒரே போட்டியில் சுக்கு நூறாக்கிய ‘கிங்’ கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 20, 2019 12:28 AM

ரஸல் அதிரடி காட்டியும் நூழிலையில் வெற்றி வாய்ப்பை கொல்கத்தா தவறவிட்டுள்ளது.

IPL 2019: RCB register their second win of the season

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 34 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 35 -வது போட்டி இன்று(19.04.2019) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் விராட் கோலி 58 பந்துகளில் 100 ரன்களை அடித்து அதிரடி காட்டினார். மேலும் மொயின் அலி 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 203 ரன்கள் எடுத்து நூழிலையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. இதில் நிதிஷ் ரானா 46 பந்துகளில் 85 ரன்களும், ரஸல் 25 பந்துகளில் 65 ரன்களும் எடுத்தனர்.

Tags : #IPL #IPL2019 #VIRATKOHLI #PLAYBOLD #RCBVSKKR #KINGKOHLI