குறி ஸ்டெம்புக்கா? இல்ல அவருக்கா?.. ‘மேலே பலமாக விழுந்த பந்து’..வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 20, 2019 07:35 PM
மும்பை வீரர் சூர்யக்குமார் யாதவ் ரன் எடுக்க ஓடிய போது ராஜ்ஸ்தான் வீரர் வீசிய பந்து பலமாக அவரை தாக்கியது.

ஐபிஎல் டி20 லீக்கின் 36 -வது போட்டி இன்று(20.04.2019) ஜெய்ப்பூர் நகரில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டி காக் 65 ரன்களும்,சூர்யக்குமார் யாதவ் 34 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.
இப்போட்டியின் உனட்கட் வீசிய 12 -வது ஓவரை எதிர் கொண்ட மும்பை அணி வீரர் சூர்யக்குமார் யாதவ் பந்தை அடித்து ரன் எடுக்க மறு முனைக்கு ஓடினார். அப்போது ராஜஸ்தான் வீரர் வீசிய பந்து எதிர்பாராத விதமாக சூர்யக்குமார் மீது பலமாக விழுந்தது. ஆனால் இது குறித்து அவர் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
WATCH: Ouch! Surya comes in the firing line
— IndianPremierLeague (@IPL) April 20, 2019
Full video here 📽️📽️https://t.co/DoCHDni9FF #RRvMI pic.twitter.com/BmoSOOnD4Q
