‘நல்லவேளை அஸ்வின் இல்ல’.. ‘முடிஞ்சா மான்கட் பண்ணிக்கோ’.. சேட்டை செய்த கோலியின் வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 19, 2019 11:16 PM
கோலி மற்றும் மொயின் அலியின் அதிரடியால் பெங்களூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 34 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 35 -வது போட்டி இன்று(19.04.2019) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் விராட் கோலி 58 பந்துகளில் 100 ரன்களை அடித்து அதிரடி காட்டினார். மேலும் மொயின் அலி 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனை அடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.
இப்போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரேன் பந்து வீச வந்து உடனே நிறுத்துவிட்டார். அப்போது கோலி மன்கட் முறையில் தன்னை நரேன் அவுட் செய்ய போகிறாரோ என எண்ணி பேட்டை க்ரீஸில் வைத்து கிண்டலடிப்பார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"Mankading me? NO, says Virat"#KKRvRCB #KKRvsRCBhttps://t.co/jjwYEoRTcP
— KhurShah (@ShahKhur) April 19, 2019
