என்னய்யா இது..! எதுக்கு கெய்ல் காலை புடிச்சாரு தீபக் ஷகர்?.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 05, 2019 08:58 PM
க்றிஸ் கெய்லுடன் தீபக் ஷகர் காலைப் பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 லீக்கின் 55 -வது போட்டி இன்று(05.05.2019) மொகாலியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டு பிளிஸிஸ் 96 ரன்களும், சுரேஷ் ரெய்னா 53 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 18 ஓவர்களின் முடிவில் 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் க்றிஸ் கெய்ல் களமிறங்கினர். ஆரம்பம் முதலே ராகுல் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். 108 ரன்களில் தான் சென்னை அணி தனது முதல் விக்கெட்டை எடுத்தது. ஆனாலும் 18 புள்ளிகளுடன் சென்னை அணி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் 9 -வது ஓவரின் போது சென்னை அணி வீரர் தீபக் ஷகர், கெய்லுடன் குறும்பாக காலைப் பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
CHahar holds gayle...!!https://t.co/brvAKD8uf9
— Vidshots (@Vidshots1) May 5, 2019
