'கோடீஸ்வரர் வீட்டில் வேலை பார்த்த இளம் தம்பதி'... 'வீட்டின் கதவை திறந்தபோது கண்ட காட்சி'... நிலைகுலைந்த மொத்த குடும்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 09, 2021 03:34 PM

இளம் தம்பதி உட்பட வீட்டில் 4 பணியாளர்கள் வேலை செய்து வந்துள்ளார்கள்.

wo domestic helps spike dinner, rob businessman’s house

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குர்மீத் சிங். இவர் கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார். குர்மீத் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஹரி சிங், குரஷனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் குர்மித் தனது மனைவி குழந்தைகளுடன் டெஹரடூனுக்கு சென்றார். இதையடுத்து வீட்டில் ஹரி சிங், குரஷன், நேபாளத்தைச் சேர்ந்த பணியாளர்களான இளம் தம்பதி மற்றும் மேலும் 4 பணியாளர்கள் இருந்தனர்.

wo domestic helps spike dinner, rob businessman’s house

இதனிடையே டெஹரடூனுக்கு சென்ற  குர்மீத் சிங் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த 6 பேரும் மயங்கிக் கிடந்துள்ளார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையாக்கப்பட்ட பின் அவர்கள் குணமடைந்தார்கள். இதற்கிடையே குர்மீத் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு டெஹரடூனுக்கு சென்றதைப் பயன்படுத்திக் கொண்ட இளம் தம்பதி, வீட்டிலிருந்த அனைவருக்கும் இரவு உணவை 7.30 மணிக்குக் கொடுத்தனர். அதை சாப்பிட்ட 6 பேரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்கள்.

wo domestic helps spike dinner, rob businessman’s house

பின்னர் அந்த தம்பதி வீட்டிலிருந்த லட்சக்கணக்கான பணம், நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டனர். அடுத்தநாள் காலையில் வெளியூர் சென்ற குர்மித் வீடு வீட்டிற்குத் திரும்பிய பின்னர் தான் இந்த சம்பவம் குறித்துத் தெரியவந்துள்ளது. இதனிடையே வீட்டு வேலைக்கு ஆட்களை எடுக்கும் முன்னர் அவர்கள் குறித்த முழு விவரங்களையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என போலீசார் கூறியுள்ளார்கள் .

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wo domestic helps spike dinner, rob businessman’s house | India News.