'அட'!.. இணையத்தை கலக்கும் நடராஜன் - யோகி பாபு சந்திப்பு!.. வேற லெவல் பரிசை அளித்த நடராஜன்!.. சுவாஸ்ய பின்னணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
![natarajan yogi babu surprise meet murugan gift pic viral natarajan yogi babu surprise meet murugan gift pic viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/natarajan-yogi-babu-surprise-meet-murugan-gift-pic-viral.jpg)
சேலம் சின்னப்பம்பட்டி என்றவுடன் தற்போது அனைவரின் நினைவுக்கும் வருபவர் டி.நடராஜன். இவருக்கு ரசிகர்களிடம் இருந்து இன்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி, பின்னர் இந்திய அனியில் இடம் பிடித்து அசத்தினார்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 3 வடிவ கிரிக்கெட் தொடர்களில் அறிமுகமானார், யார்க்கர் கிங் நடராஜன். இதன் பின்னர் இவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் இங்கிலாந்து தொடர், ஐபிஎல் எதிலும் கலந்துக்கொள்ளாமல் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் இவரும், தமிழ் சினிமா நடிகர் யோகி பாபுவும் நேரில் சந்தித்துக்கொண்டுள்ளனர். இருவரும் உணவகம் ஒன்றி சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், யோகி பாபு தீவிர முருகன் பக்தர் என்பதால் முருகன் சிலை ஒன்றையும் அன்பு பரிசாக நடராஜன் கொடுத்துள்ளார்.
நடராஜனின் ட்விட்டர் கேப்ஷனில், "நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய முக்கிய நாள் இது. எப்போதும் அன்பாகவும் கலகலப்பாகவும் இருக்கக்கூடியவரான நண்பர், யோகிபாபுவை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யோகி பாபுவும் - நடராஜனும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். சமீபத்தில் நடிகர் யோகி பாபுவின் மண்டேலா படத்தை கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாராட்டியிருந்தார். அப்போது யோகி பாபு எனது நண்பர்தான் எனக்கூறி ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியை நடிகர் யோகி பாபுவுடன் வீடியோ காலில் நடராஜன் பேசவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)