'கேப்டன் பதவி இல்லன்னா என்ன'... 'கோலியின் அக்கா போட்ட ஒற்றை பதிவு'... நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து அவரது சகோதரி போட்டுள்ள பதிவு நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

50 ஓவர் போட்டிகளைக் கடந்து 20 ஓவர் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த உலகக்கோப்பை 20 ஓவர் போட்டிகள் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த தொடருக்குப் பின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக இந்திய அணியின் கேப்டன் கோலி நேற்று அறிவித்தார்.
கோலியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. கோலிக்குப் பின் யார் கேப்டன் பதவியை ஏற்கப் போகிறார் என்ற பேச்சு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் கோலியின் அக்காவான Bhawna Kohli Dhingra தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கோலி தனது கேப்டன் பதவியைத் துறந்தது குறித்துப் பதிவிட்டுள்ளார்.
அவருடைய பதிவில், ''விளையாட்டு திறன் என்பது உங்கள் ஆர்வத்தையும், கடின உழைப்பையும் மட்டுமின்றி, சரியான முடிவுகளை எடுப்பதற்கான தெளிவையும் கொடுக்கிறது. உங்களின் இந்த முடிவை மதிக்கிறோம், கடவுள் ஆசீர்வதிப்பர்'' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
